
இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் காரணமாக ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்பட்ட ஐ.பி.எல் தொடர் மீண்டும் வரும் மே 17ஆம் தேதி முதல் தொடங்கும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஐ.பி.எல் மீண்டும் தொடங்கும் அதே நாளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றனர். அந்தப் போட்டி பெங்களூருவில் நடைபெற உள்ளது.
இதனை அடுத்து ஜூன் 3ஆம் தேதி ஐ.பி.எல் இறுதிப் போட்டி நடைபெறும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்நிலையில் டெல்லி அணியின் வீரர் ஜாக் பிரஷர் மெக்குர்க் மீதமுள்ள ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதனால் அவருக்கு பதிலாக வங்கதேச அணியின் வேகப்பந்துவீச்சாளரான முஸ்தபிசுர் ரஹ்மான் டெல்லி அணியில் விளையாட உள்ளார்.