
மலையாளம் மட்டுமல்லாமல் தென் இந்தியா அளவில் பேசும் பொருளாக மாறி இருப்பவர்தான் ராப் பாடகர் வேடன். இவர் விசிக தலைவர் திருமாவளவன் உடன் வீடியோ காலில் உரையாடிய காட்சி வைரலாகி வருகிறது. இதன் மூலம் வேடன் விரைவில் விசிக-வில் இணை இருப்பதாக பேசப்பட்டது. இதற்கு காரணம் வீடியோ காலில் உரையாடும் போது திருமாவளவன் அவரிடம் அடுத்த ஒரு சில நாட்களில் நடக்க இருக்கும் பேரணிக்கு முடிந்தால் வாருங்கள் என்று அழைப்பு விடுத்தார்.
ஜூன் 14ஆம் தேதி அதாவது நாளை விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் மதசார்பின்மை காப்போம் என்ற தலைப்பில் பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் நாங்கள் 35 ஆண்டுகளாக பேசும் அரசியல் நீங்கள் சில நிமிட பாடலில் கடத்தி விடுகிறீர்கள் என்று திருமா கூற, நீங்கள் பேசுவதால்தான் இப்படி பாடுவதற்கு எனக்கு தைரியம் கிடைக்கிறது என்று வேடன் கூறியுள்ளார். அப்போது எங்கள் பேரணிக்கு நீங்கள் வந்தால் உற்சாகமாக எழுச்சியாக இருக்கும் என்று திருமாவளவன் அழைப்பு விடுத்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியது.