
பிரபல இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் ஆதிபுருஷ் என்ற படத்தில் தற்போது நடித்துள்ளார். இந்த படத்தில் சீதையாக கீர்த்தி சனோனும், ராவணனாகவும் சைஃப் அலிகானும் நடிக்கிறார்கள். இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ஜூன் 16-ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் ஆதிபுருஸ் படக்குழுவினர் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். அதன்படி நடிகர் பிரபாஸ், கீர்த்தி சனோன், இயக்குனர் ஓம்ராவத் ஆகியோர் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
அப்போது மரியாதை நிமித்தமாக நடிகை கீர்த்தி ஓம்ராவத்தை கட்டி பிடிக்க அவர் திடீரென நடிகை கீர்த்திக்கு முத்தம் கொடுத்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த கீர்த்தி எதுவும் சொல்லாமல் காரில் கிளம்பி சென்று விட்டார். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் பாஜக மாநில தலைவர் இது தேவையா என விமர்சித்துள்ளார். மேலும் பிரபல திருப்பதி கோவிலில் இயக்குனர் ஒருவர் நடிகைக்கு முத்தம் கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Actress #KritiSanon and Director #OmRaut visited #Tirumala this morning to seek blessings.#Adipurush #AdipurushOnJune16th#ShreyasMedia #ShreyasGroup pic.twitter.com/qXs4IJGqni
— Shreyas Media (@shreyasgroup) June 7, 2023