பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்தவர் ஷெஃபாலி ஜரிவாலா(42). இவர் மாடலாகவும்  இருந்துள்ளார். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 13 இல் பங்கேற்ற இவர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இந்நிலையில் இவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவரது கணவர் அவரை மும்பை உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அவரது குடும்பம் மிகவும் அதிர்ச்சியில் உள்ளனர். இவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.