
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மெகா ஸ்டார் சிரஞ்சீவி. இவருக்கு கேன்சர் நோய் இருப்பதாக இணையதளங்களின் தகவல்கள் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் கேன்சர் நோய் தொடர்பான தகவல்களுக்கு தற்போது சிரஞ்சீவி விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், நான் ஒரு கேன்சர் சென்டர் திறப்பு விழாவில் பங்கேற்ற போது ரெகுலராக டெஸ்ட் செய்து கொண்டால் கேன்சர் நோயை தடுக்கலாம் என எதார்த்தமாக கூறினேன். நான் colon scope test செய்து கொண்டேன்.
அப்போது எனக்கு non cancerous polyps இருப்பது தெரிய வந்ததால் அது சரி செய்யப்பட்டது. ஒருவேளை நான் டெஸ்ட் செய்யாமல் இருந்தால் அது கேன்சர் ஆக மாறி இருக்கும். இதனால்தான் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கூறினேன். ஆனால் இதை சிலர் தவறாக புரிந்து கொண்டு எனக்கு கேன்சர் நோய் இருப்பதாக தகவல் வெளியிட்டு விட்டார்கள் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இதனால் சிரஞ்சீவிக்கு கேன்சர் நோய் இருப்பதாக வந்த தகவல் போலியானவை என்பது தெரிய வந்துள்ளது.
కొద్ది సేపటి క్రితం నేనొక క్యాన్సర్ సెంటర్ ని ప్రారంభించిన సందర్భంగా క్యాన్సర్ పట్ల అవగాహన పెరగాల్సిన అవసరం గురించి మాట్లాడాను. రెగ్యులర్ గా మెడికల్ టెస్టులు చేయించుకుంటే క్యాన్సర్ రాకుండా నివారించవచ్చు అని చెప్పాను. నేను అలర్ట్ గా వుండి కొలోన్ స్కోప్ టెస్ట్…
— Chiranjeevi Konidela (@KChiruTweets) June 3, 2023