உலக அளவில் மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஒரு முறையாவது தேர்வினை சந்திக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதாவது பள்ளிப் பருவம் முதல் கல்லூரி வரை தேர்வு என்பது மிகவும் கட்டாயமான ஒன்றாக இருக்கிறது. சில சமயங்களில் தேர்வு எழுத செல்லும் போது இந்த தேர்வினை யார் கண்டுபிடித்தார்கள் என்ற கோபம் பொதுவாக நமக்குள்ளே எழுவது வழக்கம். இந்நிலையில் தற்போது முதன்முறையாக தேர்வு எங்கு நடந்தது  என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

கடந்த 1858 டிசம்பர் 14ஆம் தேதி முதன் முறையாக நிர்வாக தேர்வு என்பது நடத்தப்பட்டது. இந்த தேர்வினை நடத்த கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தை சேர்ந்த ஆசிரியர்கள் இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றனர். மேலும் இந்தியாவில் கடந்த 1853 ல் முதன் முறையாக தேர்வு நடத்தப்பட்டது என்று கூறப்படுகிறது.