
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புதுப்பட்டினம் பகுதியில் அகமது கபீர் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய 3-வது மகன் இர்ஷாத். இந்த சிறுவனுக்கு 16 வயது ஆகும் நிலையில் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளான். தஞ்சாவூரில் 2 நாட்களாக மழை காரணமாக விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. ஆனால் விடுமுறை நாளில் மாணவன் தேர்வுக்கு படிக்காமல் செல்போன் பார்த்தபடியே இருந்துள்ளான். இதனால் பெற்றோர் தேர்வுக்கு படிக்கும்படி கண்டித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை மாடியில் சிறுவன் படித்துக் கொண்டிருந்துள்ளான். அப்போது நீண்ட நேரமாக கீழே இறங்கி வராததால் அவருடைய தந்தை மேலே சென்று பார்த்தார். அப்போது ஒரு சேலையில் தூக்கு மாட்டி சிறுவன் தொங்கியது தெரியவந்த நிலையில் உடனடியாக சிறுவனை பெற்றோர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டான். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.