செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டு…. முடிகின்ற தருவாயில் இருக்கின்ற பொழுது ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

திமுக ஆட்சிக்கு வந்தது. திரு ஸ்டாலின் முதலமைச்சரானார். ஆக இரண்டரை ஆண்டுகாலம் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில்,  அண்ணா திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள்,  முடிவுற்ற பணியை தான் திறந்து வைத்துக் கொண்டிருக்கிறார். இது எதார்த்த உண்மை.

சேலத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்…. சீர்மிகு நகரம், ஸ்மார்ட் சிட்டி. அந்த திட்டத்தின் வாயிலாக பல்வேறு பணிகள் நிறைவடைந்து அதை இன்றைய முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்கள் நேரடியாக வந்து திறந்து வைத்தாரா ? இல்லையா ? புதிய பேருந்து நிலையத்திற்கு சீர்மிகு  நகரத்தின் அடிப்படையில் சேலம் மாநகரத்தில் புதிய பேருந்து நிலையத்திற்கு அவருடைய தந்தை பெயரை சூட்டினாரா ? இல்லையா ?

அதே போல அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் ஒரு வருடத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் கொண்டு வந்தோம். அந்த கல்லூரிகள் எல்லாம் ஒரு 60%,  70% அந்த பணியுங்கள் நிறைவு பெற்றன. ஆட்சி மாற்றம் ஏற்பட்டது,  திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எஞ்சிய பணிகள் நிறைவேற்றப்பட்டு,  அந்த கட்டிடத்தை திறந்து வைத்துக் கொண்டிருக்கிறார். அதுதான்  நான் குறிப்பிட்டு பேசினேன்.

பல்வேறு பாலப் பணிகள் அண்ணா திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. கோயம்புத்தூரில் திரு ஸ்டாலின் தான் திறந்து வைத்தார். அதேபோல் பல்வேறு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. அந்த மாவட்டங்களில்  மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகமும் கட்டப்பட்டு அதை திறந்து வைத்தார்கள்.

அதுமட்டுமல்ல…நிறைய கட்டிடங்கள்….. பல்வேறு துறை சார்ந்த அலுவலக கட்டிடங்கள் அண்ணா திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. ஆட்சி மாற்றத்துக்கு பிறகு அந்த முடிவற்ற பணியை ஸ்டாலின் திறந்து வைத்தார். அதற்கு  ரிப்பன் கட் பண்ணிக் கொண்டிருக்கிறார் என தெரிவித்தார்.