
செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், எய்மஸ் என்றால் செங்கலை காமிக்கிறாரு. நீட் எக்ஸாம்னா முட்டையை காமிக்கிறாரு. நான் என்ன சொல்லுறேன். தமிழக மாணவர்களை குழப்பாமல்… அமைதியாக இருந்தாலே போதும் தமிழக மாணவர்கள் சிறப்பாக படித்து, சிறந்த டாக்டர்களாக நிச்சயம் வருவார்கள்.
ஏனென்றால் இந்தியா முழுக்க நீட் எக்ஸாம் கண்டிப்பாக நடக்கும் என்று சுப்ரீம் கோர்ட் ஆர்டர் போட்டாச்சு. இனிமேல் தமிழ்நாட்டில் மட்டும் அதற்கு விலக்கு என்பது சாத்தியமில்லாத ஒரு விஷயம். அதனால் இவர்கள் அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக மாணவர்களை தொடர்ந்து குழப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
நீங்க ஒரு கையெழுத்துன்னு சொன்னீங்க… இப்பதான் 50 லட்சம் கையெழுத்துங்குறீங்க…. அப்புறம் 50 கோடி கையெழுத்துன்னு சொல்லுவீங்க… நீங்க எத்தனை கோடி கையெழுத்து வாங்கினாலும், முட்டைய காமிச்சாலும், ஆம்லெட் காமிச்சாலும்… நிச்சயமாக நீட் என்பது கட்டாயம் இருக்கத்தான் போகிறது. அதனால் தயவு செய்து மாணவர்களை குழப்பாதீர்கள்…
அவர்கள் போக்கிற்கு விடுங்கள்… அரசியல்வாதிகள் உங்கள் அரசியல் வேலையை பார்த்துக் கொண்டு… மாணவர்களின் விஷயத்தில் தலையிடாமல் இருந்தாலே, அனைத்து மாணவர்களும் நீட் எக்ஸாம் தெளிவாக படித்து, மிகப் பெரிய அளவில்… இந்திய அளவில்…
முதல் மார்க் வாங்க கூடிய மாணவர்களாக தமிழ்நாட்டு மாணவர்கள் இப்பொழுதும் இருக்கிறார்கள். அதிகமாக ஜெயிப்பார்கள், அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதனால் மாணவர்களை குழப்பம் செய்வதை விட்டு விட்டு அவர்களுக்கு ஆதரவாக இந்த அரசு நல்லது செய்யணும்னு நான் கேட்டுக்குறேன் என தெரிவித்தார்.