
திமுக சார்பில் நடந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய பிரபல ஊடகவியலாளரான தமிழ்க் கேள்வி செந்தில், நீட் எதிர்ப்பு போராட்டம் நடத்த உதயநிதி ஸ்டாலின் அழைப்பார்… வாங்க…. சுய மரியாதை இருக்கு இருக்குல்ல… இனமான உணர்வு இருக்குல்ல… பாஜக உடனான கூட்டணி முறிச்சிக்கிட்டீங்கல…. உதயநிதி ஸ்டாலின் அவர்களோடு கரம் கோர்த்து,
டெல்லிக்குச் சென்று நீட் எதிர்ப்புக்காக போராடுவதற்கு எடப்பாடி பழனிச்சாமிக்கும், அஇஅதிமுகவுக்கும் திராணி இருக்கிறதா ? என்று கலைவாணர் அரங்கத்தில் நான் கேட்கிறேன். அப்போ நீங்க வரமாட்டீங்க ? ஏன் வர மாட்டீங்கனா..? நீட் விலக்கு மசோதா ஒன்றிய அரசால் திருப்பி அனுப்பப்படுகிறது.
திருப்பி அனுப்பப்பட்ட மசோதாவை திருப்பி அனுப்பி விட்டார்கள் என்று கூட நாட்டு மக்களுக்கு சொல்லாமல், பல ஆண்டுகளாக மறைத்து வைத்து… தமிழ் சமூகத்திற்கு துரோகம் இழைத்த கூட்டம். அப்போ உங்களுக்கு இதைப் பற்றி பேசுவதற்கு எந்த தார்மிக உரிமையும், தகுதியும் இல்லை.
சரி உதயநிதி ஸ்டாலின் எப்படி வாங்கி தருவாரு ? திமுக எப்படி நீட் விலக்கு வாங்கித் தந்திருமா ? அப்படின்னா…. அதை மட்டும் சொல்லி நிறைவு செய்கிறேன்… மற்றவர்கள் பேசணும்…. திராவிட முன்னேற்றக் கழகத்துடைய… திராவிட இயக்கத்துடைய வரலாறு தெரியாமல் கேட்கிறார்கள் என தெரிவித்தார்.