தமிழகத்தில் 11, 12 ஆம் வகுப்பு தேர்வுகள் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இதனிடையே பொது தேர்வுக்கு வருகை தராத மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதாவது, நடப்பு ஆண்டு பொதுத் தேர்வு எழுதாத மாணவர்களும், தேர்வில் கலந்துகொண்டு தேர்ச்சி பெறாத மாணவர்களும் ஜூன் மாதம் நடைபெறும் உடனடி தேர்வில் பங்கேற்கலாம். மாணவர்கள் அனைவருக்கும் இதற்காக தனி சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.