அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளாது. மக்களவை தேர்தலில் அதிமுக சார்பிலும், கூட்டணி கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதில், வரும் 28ஆம் தேதி மற்றும் ஏப்ரல் 8ஆம் தேதி சுற்றுப்பயண திட்டம் மட்டும் மாற்றி அமைக்கப்படுகிறது.

28ஆம் தேதி மாலை 4 மணிக்கு சிவகாசி பாவடி தோப்பு திடலிலும், இரவு 7 மணிக்கு மதுரை பழங்காநத்தம் ஜெயம் தியேட்டர் அருகிலும் நடைபெற உள்ளது. ஏப்ரல் 8ஆம் தேதி மாலை 4 மணி காரைக்குடியிலும், இரவு 7 மணிக்கு ராமநாதபுரம் அரண்மனை அருகிலும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.