
இந்தியாவில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களுடைய எதிர்கால வாழ்வுக்கு உதவும் விதமாக இபிஎப்ஓ வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் குறிப்பிட்ட சதவீதம் மாதாந்திர ஊதியத்தை சேமிக்கின்றனர். பிஎஃப் தாரர்கள் தங்களுடைய பிஎப் கணக்கில் நாமினிகளை கட்டாயம் சேர்க்க வேண்டும். இதன் மூலமாக பிஎஃப் தாரர்கள் பின்னால் அவர்களின் குடும்பத்தினர் பயனடையலாம். ஆனால் திருமணத்திற்கு பிறகு பிஎப் தாரர்கள் தங்களுடைய நாமினியின் பெயரை மாற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது. வாழ்க்கை துணையின் பெயரை நாமினியாக சேர்க்க பல விதிமுறைகள் உள்ளன. அது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
முதலில் ஈ பி எஃப் ஓ அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்குச் சென்று view என்ற பகுதியில் உள்ள profile என்ற ஆப்ஷனில் நாமினேசன் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
பிறகு உங்களுடைய காண்பிக்கப்படும். அதில் proceed கிளிக் செய்து family declaration என்ற பகுதிக்கு செல்ல வேண்டும்.
அங்கு yes அல்லது no என்ற விருப்பத்தில் yes விருப்பத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் திறக்கும் புதிய பக்கத்தில் ஃபேமிலி டீடைல்ஸ் என்பதை கிளிக் செய்து உங்கள் வாழ்க்கை துணையின் பெயர் மற்றும் ஆதார் விவரங்களை பதிவிட வேண்டும்.