வடக்கு மேசடோனியாவின் கோக்கானி பகுதியில் ஓர் கேளிக்கை விடுதி உள்ளது. இங்கு ஹிப் ஹாப் நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தப் போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மொத்தம் 59 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோட பலரும் காயமடைந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அங்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் பல தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த கேளிக்கை விடுதியில் பிரபல ஹிப் ஹாப் இசைக் குழு நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் 1500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் கலந்துகொண்ட இளைஞர்கள் சிலர் தீயை கொண்டு சில சாகசங்களை செய்துள்ளனர். அப்போது அதிலிருந்து நெருப்பு அரங்கின் மேற்கூரையில் பரவி தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது. இருப்பினும் இதுகுறித்து தீவிர விசாரணைக்கு பின்னரே காரணம் உறுதியாக தெரியவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.