
கட்சி நிகழ்ச்சிகளில் கட் அவுட், பேனர்கள் வைக்க திமுக தடை விதித்துள்ளது. இது குறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர்கள் உள்ளிட்ட முன்னோடிகள் கலந்துகொள்ளும் எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் கட் அவுட், பேனர்கள் போன்றவை வைக்கக்கூடாது. இதனை யாரேனும் மீறுவது குறித்து கட்சி தலைமைக்கு தெரியவந்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் முகம் சுளிக்கும் விதமாக இப்போது ஒரு சிலர் பேனர் வைப்பதாக தகவல் வந்திருக்கிறது. நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் 1 (அ) 2 பேனர்கள் விளம்பரத்திற்காக உரிய அனுமதியோடு வைத்துக்கொள்ளலாம். ஆனால் சாலை மற்றும் தெரு நெடுகிலும் மக்களுக்கு இடையூறு ஏற்படும் விதமாக பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.