குடியாத்தம் பகுதியை அடுத்த ஆலந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் நித்தோஷ். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் பெற்றோருக்கு தெரியாமல் பல இடங்களில் கடன் வாங்கி கடனை திரும்ப செலுத்த முடியாமல் இருந்திருக்கிறார். இதனால் கடன் கொடுத்தவர்கள் வட்டி மற்றும் அசல் முதலியவற்றை செலுத்துமாறு வற்புறுத்தி வந்துள்ளனர்.

இதனால் சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த நித்தோஷ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் இருந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.