
மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபை பதவிக்காலம் நவம்பர் 26 ஆம் தேதி முடிவடைகின்றதால் நவம்பர் மாதம் 20-ஆம் தேதி அங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போல ஜனவரி 5-ம் தேதியுடன் 81 இடங்களைக் கொண்ட ஜார்கண்ட் சட்டசபையின் பதவிக்காலம் முடிவடைகின்றது.
எனவே அங்கு நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது. பின்னர் இரு மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் நவம்பர் 23-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் சிவசேனா, பாரதிய ஜனதா, அஜித்பார் கூட்டணி ஆட்சியும் ஜார்கண்டில் ஜார்கண்ட் முத்தி மோட்சா கட்சி ஆட்சியும் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.