செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,  எடப்பாடி திகார் சிறைக்கு செல்வர் என்று சொன்னது ரகசியம் என சொல்றத எப்படி வெளியில சொல்ல முடியும்? அதனாலே  ரகசியம் என  சொன்னேன் நானு. இதனை தெரியப்படுத்துவதற்கும்  தெரியப்படுத்துவேன். அது ஆட்டோமேட்டிக்கா வரும் பின்னால வரும்…

கடைசி வரை வழக்கு மீது எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. கீழே  இருந்து உச்ச நீதிமன்றம் தான் இறுதியான தீர்ப்பை வழங்க இருக்கிறது. அந்த தீர்ப்பில் எங்களுக்கு நியாயமான…. நியாயமாக புரட்சித் தலைவர் உருவாக்கிய சட்ட விதியில் நியாயம் கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

அப்ப நடந்த பொதுக்குழுவில் யாரெல்லாம்  6:00 மணிக்கு யாரெல்லாம் முன் வரிசையில் உட்கார வச்சாருனு உங்களுக்கு தெரியும். யாரெல்லாம் தண்ணீர் பாட்டில்  கொண்டு எரிச்சாருன்னு, உங்களுக்கு தெரியும். இப்ப அவங்க எல்லாம் வந்து உட்கார்ந்து இருக்காங்க.

எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து விலகும் வரை எங்களின் போராட்டம் தொடரும். ஏற்கனவே, நான் அதற்கு பலமுறை பதில் சொல்லி இருக்கிறேன் உறுதியாக மாண்புமிகு சின்னம்மா அவர்கள் விரும்பினால் நான் சந்திப்பேன். தேனி மாவட்ட அதிமுக அலுவலகத்தை கைப்பற்றினார்கள்  என்பது தவறான செய்தி, அந்த அலுவலகத்தை நாங்களும், அமமுக-வும் பயன்படுத்திக்கலாம்  தீர்ப்பு வழங்கி இருக்கிறது.