
செய்தியாளரிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ், தர்மத்தின் பக்கம் நிற்கக் கூடியவர் அண்ணன் ஓபிஎஸ் பக்கம் இருக்கிறார்கள். அதர்மம் என்று தெரிந்தும்…. இது தர்மம் இல்லை என்று தெரிந்து நிற்பவர்கள் எடப்பாடி பின்னால் இருப்பவர்கள் … தளவாய்சுந்தரம் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் சொன்னார்…. என்ன சொன்னாரு ? வேட்பாளர்களுக்கு பணம் செலவு பண்றது ? எடப்பாடியால் தான் பண்ண முடியும். அப்போ என்ன அர்த்தம் ? பணம் இருக்கிறது…. அதனால் நாங்கள் ஏற்றுக் கொண்டோம் என எடப்பாடிக்கு பின்னல் நிற்கின்றார்கள்.
எடப்பாடி மனம் திருந்தினால் வாய்ப்புண்டு. அவர் திருந்துவதற்கான வாய்ப்பு இல்லை என்று நான் நினைக்கிறேன். கிராமப்புறங்களில் காசை வெட்டி போட்டு உனக்கும், எனக்கும் தொடர்பு இல்லை என்று சொல்வார்கள் அல்லவா….. அது போன்ற தன்மையில் எடப்பாடி அரசியல் செய்கிறார். நான் சொல்றது புரியுதா ? உங்களுக்கு….. தன் ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்கு மட்டும்தான் இவர்களை பயன்படுத்திவிட்டு, ஆட்சி முடிந்தத பிறகு அனைவரையும் ஒழிப்பேன் என்பது ஜனநாயகத்தில் ஏற்புடையதல்ல, எதிர்ப்பவனையும் தன் வசப்படுத்துபவன் தான் தலைவன்.
தன்னோடு இருப்பவனை தக்க வைப்பவன் தலைவன் அல்ல. யாரெல்லாம் எதிர்கிறார்களோ அவர்களும் தன்னை ஏற்றுக்கொள்ளுகின்ற நிலையில் அரசியல் செய்யும் தான் தலைவன், அந்த தலைமைக்கான தகுதி என்பது அவரிடம் இல்லை. தன் மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்லி தனி கட்சி தொடங்கிய எஸ்டி சோமசுந்தரத்தை கூட புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஏற்றுக்கொண்டார்.
தன் அரசியலையே அடியோடு எதிர்த்த ஆர்.எம் வீரப்பனை கூட புரட்சித்தலைவி அம்மா கல்வி அமைச்சராக கட்சியிலே ஏற்றுக்கொண்டு, தனக்கு நிகரான இணை பொது செயலாளர் பதவி கொடுத்தார், இதுதான் தலைமை பண்பு என்பது. காரியம் ஆகுற வரை ஒருத்தருடைய காலை பிடித்து விட்டு, சூரியனை பார்த்து குலைக்கின்ற நாய் என்று சொல்வது, 420 என சொல்வது, திமுகவினுடைய B-Team, சூடு இருக்கா ? சொரணை இருக்கா ? சூடு, சொரணை இருக்கிறவன் செய்த காரியமா நீ கூவத்தூரில் விழுந்தது என விமர்சனம் செய்தார்.