மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் பேசிய முன்னாள் அமைச்சர் வளர்மதி, அக்டோபர் பத்தாம் நாள் 1972 புரட்சித்தலைவர் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அன்றைக்கு இதே ஜான்சி ராணி பூங்காவில் புரட்சித் தலைவருக்கு ஆதரவாக தாமரை சின்னம் பொறித்த கொடியை புரட்சித்தலைவரின் தொண்டன், ஏழை தொண்டன், ரிக்ஷா தொண்டன், ”’வாழவந்தான்” இதே மதுரையில் தான் ஏற்றினான்.

கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. புரட்சித்தலைவர் கட்சி ஆரம்பிக்கும் முன்னே அவருக்காக கட்சி ஆரம்பித்த ஊர் இந்த மதுரை.  கட்சி தொடங்கியதும்,  திருவான்மியூர் மாநாட்டிலே என்னை பேச வைத்து அழகு பார்த்தவர் புரட்சித்தலைவர்.

அதற்குப் பிறகு தலைவர் இல்லை, தலைவியும் இல்லை, அனாதையாய் நின்ற நம்மை அண்ணனாய் நின்று அரவணைத்து காத்தவர் நம் அண்ணன் எடப்பாடியார். ”சிலுவபாளையம்” கண்ணுக்குத் தெரியாத இந்த கிராமத்தின் பெயர் கண்டங்களை தாண்டி, கடல்களைத் தாண்டி, காற்றின் வேகம் போல ககன  வெளிகளில் ஒலித்துக் கொண்டிருப்பதற்கு ஒரே காரணம் ”அண்ணன் எடப்பாடியார்” தான்.

உயிர் வாழ பயிற்சி அளிக்கும் காவிரி தாயின் காலடியில் கண் மலர்ந்த பொன்மஹர்வு தாய் தவசி அம்மாள் தவம் இருந்து பெற்று எடுத்த தங்க மகன் ஐயா கருப்பு கவுண்டர் கண்டெடுத்த சிவப்பு வைரம். கண் வலிக்கும்போது காவிரியை பார்த்தவர்.  கால் நடக்கும் போது பச்சை வயல்களில் மனம் பறி கொடுத்தவர்.  செங்கரும்பும், செந்நல்லும் ஏந்திய கரங்களில் தான் தமிழ்நாட்டு மக்கள் செங்கோலை தந்தார்கள்.

மீண்டும் தரப் போகிறார்கள். அண்ணன் எடப்பாடியார் ஆயிரம் பறவைகள் இழப்பாறும் ஆலமரம். தொட்டி செடி அல்ல, தோண்டி எறிவதற்கு… அவர் வெட்ட வெட்ட வளரும் வாழைமரம். அவர் சிற்றாறு அல்ல,  பேரருவி.  அதியமான் ஔவைக்கு கொடுத்தது நெல்லிக்கனி,  அம்மா நமக்கு கொடுத்த தங்க கனி ”அண்ணன் எடப்பாடி” அவர் சாமானியன் அல்ல,  அவர் சாணக்கியன் என தெரிவித்தார்.