
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள் யாரை வேட்பாளர்களாக நிறுத்தலாம் என ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுக இடைத்தேர்தல் வேட்பாளரை அறிவிப்பது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி சுமார் 7 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். வேட்பாளர் தேர்வு, சின்னத்தை மீட்பது என்று பல விவகாரங்களை முன்னிறுத்தி இந்த ஆலோசனை நடைபெற்றது. வேட்புமனு தாக்களுக்கு இன்னும் 4 நாட்களே இருப்பதால் இந்த கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. நாளை காலை அதிமுக சார்பில் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.