
டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நில அதிர்வு மிகவும் வலுவாக உணரப்பட்டது. அடுக்குமாடி கட்டிடங்களில் உள்ளவர்கள் பீதி அடைந்து, கட்டிடங்களை விட்டு வெளியே வரும் அளவுக்கு வலுவான நிலநடுக்கமாக இருந்தது. அது மட்டுமல்லாமல் இது சிறிது நேரத்துக்கும் நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் முறையாக ஒரு நில அதிர்வு, பின்பு அதன் எதிரொலி இரண்டாவது அதிர்வு என இரண்டுமே மிகவும் வலுவாக இருந்துள்ளது.
நேபாளத்தில் 4.5 என்கின்ற ரிக்டர் அளவிலே இந்த நிலநடுக்கம் இருந்ததாக சொல்லப்பட்டாலும், டெல்லியில் மிகவும் வலுவாக உணரப்பட்டுள்ளது. ஆகவேதான் டெல்லி மற்றும் அதை சுற்றுப்புற பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வசிப்பவர்கள் மற்றும் அலுவலகங்களிலே பணிபுரிந்து கொண்டு இருந்தோர் அனைவருமே தங்களுடைய கட்டிடங்களை விட்டு வெளியே வரக்கூடிய அளவுக்கு ஏற்பட்டது.

ஆனால் நேபாளத்தில் இது 4. 5 என்கின்ற ரிக்டர் அளவிலே பதிவகி உள்ளது. நேபாளம் இந்தியாவிலிருந்து எல்லை நாடாக இருக்கிறது. டெல்லியை தாண்டி உத்தரப் பிரதேசம் மாநில உத்தரப்பிரதேசம் மாநிலத்திற்கு வடமேற்கு பகுதியில் தான் நேபாள நாடு இருக்கிறது. ஆகவே அவ்வளவு தொலைவு இருந்த போதிலும் மிகவும் வலுவாக இந்த நில தீர்வு உணரப்பட்டது குறிப்பிடத்தக்கதாக கருதப்படுகிறது.
இந்துக்குஸ் மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியா, சீனா, நேபாளம் ஆகிய நாடுகளில் உணரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
An earthquake with a magnitude of 4.6 on the Richter Scale hit Nepal at 2:25 pm today: National Centre for Seismology pic.twitter.com/lY8fbceXWS
— ANI (@ANI) October 3, 2023
#WATCH | Earthquake tremors felt in Khatima, Uttarakhand. pic.twitter.com/vzUterBau7
— ANI (@ANI) October 3, 2023
#WATCH | Earthquake tremors felt across Delhi-NCR. Visuals from Noida Sector 75 in Uttar Pradesh. pic.twitter.com/dABzrVoyVw
— ANI (@ANI) October 3, 2023