மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக். இவர் 48 வருடங்களாக காங்கிரஸ் கட்சியில் இருந்தார். தற்போது நடந்த தேர்தலில் தேசியவாத கட்சிக்கு மாறினார். பாபா சித்திக் பாலிவுட் நடிகரான சல்மான் கானின் நெருங்கிய நண்பர். இவரது மகன் பாந்த்ரா ஜூஸ்ஹான் கிழக்கு தொகுதியின் எம்எல்ஏ ஆவார்.

ஜூஸ்ஹானின் அலுவலகத்திற்கு பாபா சித்திக் சென்று உள்ளார். பாபா சித்திக் தனது மகனை சந்தித்து விட்டு அலுவலகத்திற்கு வெளியே வரும்போது யாரோ முகம் தெரியாத நபர்கள் அவரை சுட்டுக் கொன்றனர்.

பாபா சித்திக் இறந்த செய்தி கேட்டு, பிக் பாஸ் படப்பிடிப்பில் இருந்த சல்மான்கான் விரைந்து மருத்துவமனைக்கு சென்றுள்ளார். பாபா சித்திக்கின் இறப்பு சல்மான்கானை மிகவும் பாதித்துள்ளது. இதனால் தூக்கம் இல்லாமல் தவித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பாபா சித்திக் இறப்பு சல்மான்கான் மற்றும் அவரது குடும்பத்தினரை பெரிதும் பாதித்துள்ளது. இந்த சோகமான நாட்களில் சல்மான்கான் எந்தவித தனிப்பட்ட சந்திப்புகளுக்கும் ஒப்புதல் அளிப்பதில்லை என செய்திகள் வெளியாகி உள்ளன. தொடர்ந்து பாபா சித்திக் இன் குடும்பத்தாருடன் இறுதி சடங்குகள் குறித்த விவரங்களை சல்மான்கான் கேட்டுவருகிறார்.