இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டராக அறியப்பட்டவர் தீப்தி சர்மா. இவர் பல போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற பெரிதும் உதவியாக இருந்துள்ளார். இந்நிலையில் தீப்தி சர்மாவின் சாதனைகளை பாராட்டி உத்தர் பிரதேச அரசு அவருக்கு டிஎஸ்பி பதவிக்கான நியமன கடிதத்தையும் மூன்று கோடி ரூபாய் ரொக்க பரிசும் வழங்கியுள்ளது.

இதனால் தனது சிறுவயது கனவு நிறைவேறி விட்டதாக கூறும் தீப்தி ஷர்மா, உத்தர் பிரதேச அரசுக்கு நன்றி தெரிவித்து தான் நன்றி உணர்வுடன் இருப்பேன் என உறுதி அளித்துள்ளார்.