சென்னையில் “3 பிஎச்கே” படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்தத் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் சித்தார்த் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் வரும் ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் தற்போது இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் மாரி செல்வராஜ் கலந்து கொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் “போதை பொருள் பயன்படுத்துவது சட்டத்திற்கு புறம்பான ஒன்றாகும். அதை பயன்படுத்துவதனால் பல்வேறு விளைவுகள் ஏற்படும். அதை யார் பயன்படுத்தினாலும்  தவறுதான்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் அவரிடம் சிறிய பட்ஜெட் படங்கள் குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு மக்களின் உணர்வுகளுக்கு ஏற்றார் போல எடுக்கப்படும் படங்கள் அனைத்தும் கட்டாயமாக வெற்றிபெறும் என்று பதிலளித்தார். தற்போது அவர்  “பைசன்” என்ற படத்தை இயக்கியுள்ள நிலையில் நடிகர் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். மேலும் நடிகர் தனுஷின் நடிப்பில் “டி56” என்ற படத்தையும் இயக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.