தமிழகத்தில் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் அட்டை இல்லாததால் வீட்டு வாடகை ஒப்பந்தம் மற்றும் கேஸ் பில் உள்ளிட்ட ஆவணங்களை வைத்து 6000 ரூபாய் நிவாரண நிதி பெற ரேஷன் கடைகளில் விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுத்தனர். ஆனால் அவர்களுக்கு இதுவரை பணம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அவர்களின் செல் போன் எண்ணிற்கு அதிகாரிகள் அழைத்து விரைவில் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும் எனக் கூறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தச் செய்தி புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.