
புரட்சியாளர் இமானுவேல் சேகரன் தியாகம் நிச்சயமாக வீண் போகாது. அவருடைய வரலாறு நிச்சயமாக வருகின்ற தலைமுறைகளில் எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்… குறிப்பாக இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்… மீண்டும் சொல்வது… அவரை எதோ ஒரு ஜாதிக்குள் அடக்கி வைக்க முடியாது. புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை.. எனக்கு மிகப்பெரிய ஒரு வருத்தம்… புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை ஏதோ ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் தலைவர் அப்படின்னு ஒரு வட்டத்துக்குள்ளே திருப்பி திருப்பி பேசிட்டு இருக்காங்க.
இன்னைக்கு இந்தியாவிலேயே மகாத்மா காந்தி அவர்களுக்கு என்ன மரியாதை இருக்கிறதோ, என்னை பொறுத்த வரைக்கும் அந்த அளவுக்கு மரியாதை அம்பேத்கர் அவர்களுக்கும் கொடுத்திருக்க வேண்டும். ஆனாலும் அவரை ஏதோ ஒரு வட்டத்துக்குள்ள…. அந்த அளவுக்கு… அந்த காலத்திலே… அவ்வளவு அடக்குமுறைகளை எதிர்த்து…
புரட்சிகளை செய்து… நம்முடைய அரசியல் சாசனம்…. இன்றைக்கு இந்தியா என்றால், இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்றால், அதற்கு முதுகெலும்பாக அரசியல் சாசனம்… அதை எழுதியவர்…. எத்தனையோ புரட்சிகளை செய்தவர் நம்முடைய அம்பேத்கர் அவர்கள்… இதையெல்லாம் எப்போ மாறும் என்றால், என்னைக்கு பாட்டாளிகள் ஆட்சிக்கு வருகிறார்களோ அன்று தான் இதையெல்லாம் மாறும. அது விரைவில் நடக்கும்.
அதையும் மனசுல வச்சுக்கோங்க. நிச்சயமா விரைவில் நடக்கும். எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. ஏனென்றால் அந்த ஒரு மனமாற்றம் தமிழ்நாடு முழுவதும் பார்த்துட்டு வரேன். மக்கள் ஒரு வீரக்தியில் இருக்காங்க. வருகின்ற காலத்தில் இந்த சூழலை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கின்றேன்.
மேடையில் இருக்கின்ற அத்தனை உறவினரும் ஒன்றாக முன்னேறுவோம்… ஒன்று சேர்வோம் நம்முடைய இலக்கை நாம் அடைவோம்…. சமூக நீதி நம்முடைய அடித்தளம்… ஒற்றைக் கருத்து சமூக நீதி என்ற பெயரில் ஒன்றிணைந்தது புரட்சியாளர் இமானுவேல் சேகரனார் அவர்களின் கனவை நினைவாக்குவோம் என பேசினார்.