
இன்றைய உலகில் பெரும்பாலான மக்கள் வேலைக்கு செல்லும் நேரங்களில் என்ன சமைப்பது என்று யோசித்து கொண்டிருக்கும் நேரத்தில் பலரும் பயன்படுத்தும் ஓர் உணவு பொருள் பிரட். அந்த பிரட் தினமும் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகளை ஹெல்த் கோச் மேக்தா விளக்கி கூறியுள்ளார். அதாவது வெள்ளை பிரெட் மட்டுமின்றி, மல்டிகிரெயின் பிரெட் உள்ளிட்ட அனைத்து வகை பிரெட்டுகளும் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடும்.
“பிரெட் சாப்பிடுவதால் Auto Brewery Syndrome உருவாகும். இது செரிமானமாத பிரெட் குடலில் எத்தனால் எனும் ஆல்கஹாலை உருவாக்கி, உடலை போதை நிலைக்கு கொண்டு செல்கிறது என கூறினார். அதோடு அவரது மகளுக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்த அவர், “திடீரென மயக்கம், தலைசுற்றல் ஆகிய அறிகுறிகள் வந்ததால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். பிறகு பசிக்கும்போது அதிகமாக பிரெட் சாப்பிட்டதால்தான் Auto Brewery Syndrome ஏற்பட்டது என்பதை மருத்துவ பரிசோதனையில் கண்டறிந்தோம்,” என கூறினார்.
எனவே தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மட்டுமே பிரெட்டை சாப்பிட வேண்டும் என்ற அவர் , குடல் சுத்தமாக இருக்க காலை அல்லது இரவில் இஸப்கோல் (Psyllium Husk) எடுத்துக்கொள்ளலாம் என்றார். மேலும் தினசரி உணவில் பிரெட் சாப்பிடும் பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.