தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதாவை மனதார பாராட்டுகின்றேன் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் சொன்னது குறித்த கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுத்ததாம். எங்களுக்காக ஸ்டாலின் அழ வேண்டாம்.  சட்டமன்றத்தில் அம்மா பற்றி விமர்சனம் பண்ணுவது….  வெளியில் பொதுக்கூட்டத்தில் அம்மா பற்றி குறைவாக பேசுவது…  அம்மா போல்டாக மூத்தவர் தான் வேந்தர் என ஸ்டெப் எடுத்தாங்க…

அப்ப நீங்கள் வேந்தராக C. M அம்மா இருக்க வேண்டும் என்று சொன்னப்ப…..  நீங்கள் எதிர்த்தீர்கள் ? சட்டமன்றத்தில் ஏன்    எதிர்த்தீர்கள் ?  இப்ப ஓநாய்  அழுத கதையாக அழுது கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் எப்படி அழுதாலும்  சரி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டனை பொருத்தவரை நீங்கள் அழுவதற்காக உங்களை ஏற்க மாட்டான்.  இதெல்லாம் பெரிதாக பாசாங்கு….

நடிப்பு என எல்லாவற்றையும் உணர்ந்தவன் தான் அண்ணா திமுக தொண்டன்…  ஒன்று சொல்லுகிறேன் கேட்டுக் கொள்ளுங்கள்…   1983இல் சர்க்காரியா கமிஷன் அன்றைக்கு மத்திய அரசுக்கு அறிக்கை  கொடுக்கிறது.  ஒரு மாநிலத்தில் ஒரு முதலமைச்சருக்கும்,   ஆளுநருக்கு உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அந்த அறிக்கையில்  நிறைய கருத்துக்கள் சொல்லி இருக்கிறார்கள். நான் கேட்கிற ஒரே கேள்வி….  இப்ப வாய் திறந்து கத்துகிறீர்கள்….

17 வருடம் மத்தியில் இருந்தீர்கள்…. அப்ப ஏன் நீங்கள் அது குறித்து வாய் திறக்கவில்லை?  17 வருடம் அன்னைக்கு ஆட்சியில் மத்தியில் இருந்த போது… உங்களின் ஆதரவோடு ஆட்சி நடந்த போது,  சர்க்காரியா பைண்டிங் கொடுத்திருக்கிறார். அதை நீங்கள் நடைமுறை படுத்துங்கள் என அப்பவே செய்திருந்தால், இன்று ஒரு மாநிலத்தின் முதல்வருக்கும், கவர்னருக்கும் நல்ல ரிலேஷன்ஷிப் இருந்து இருக்கும் என தெரிவித்தார்.