
அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நாள் முதல் பல்வேறு அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இதைத்தொடர்ந்து அமெரிக்காவில் சட்டபூர்வமாக பணியாற்றி வரும் வெளிநாட்டினர் சுமார் 4.78 கோடிக்கும் அதிகமானோரின் உரிமைகள், சலுகைகள் சமீப காலங்களாக குறைக்கப்பட்டு வருகின்றது.
சமீபத்தில் அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டினர் தங்களது சொந்த நாடுகளுக்கு பணம் அனுப்பினால் 5% வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது அமெரிக்காவில் வசிக்கும் இந்திய பணியாளர்கள் விசா முடிவடைந்ததும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.
இல்லையெனில் இந்தியர்களுக்கு மீண்டும் அமெரிக்காவிற்கு வர நிரந்தர தடை விதிக்கப்படும் என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. இதனால் அமெரிக்க அதிபரின் இந்த புதிய அறிவிப்பால் அங்கு பணிபுரிந்து வரும் 45 லட்சம் இந்தியர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.