அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் ஆளும் கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வேட்பாளராக போட்டியிடுகிறார்கள் . இந்நிலையில் குடியரசு கட்சி வேட்பாளராகிய முன்னாள் அதிபர் டொனால்ட்ரம்பை கொலை செய்வதற்கு 2 முறை முயற்சிகள் நடைபெற்றது .

கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தற்போது ஒரு வீட்டில் ஒரு பெட்டியில் துப்பாக்கி குண்டுகளும் பிற ஆயுதங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு கடிதமும் இருந்துள்ளது.

அக்கடிதத்தில்
என்னுடைய முழு முயற்சியையும் பயன்படுத்தி ட்ரம்பை நான் கொலை செய்வேன் ஒருவேளை என்னால் செய்ய முடியாவிட்டால், நீங்கள் இதை செய்யுங்கள். நான் உங்களுக்கு 1.25 கோடி ரூபாய் தருகிறேன் என்று எழுதி வைத்துள்ளார். அவருடைய பெயர் ராயன் என்பதும் தெரிய வந்தது.

மேலும் இந்த பெட்டி கிடைத்த வீட்டின் உரிமையாளரும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அமெரிக்காவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.