
கனரா வங்கியில் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க உள்ளதாக வங்கி நிர்வாகிகள் கூறியுள்ளனர். இதில் 3000 பணியிடங்கள் நிரப்ப உள்ளன. இதில் புதுடெல்லியில் 100 பணியிடங்களும், கர்நாடகாவில் 600 பணியிடங்களும், கேரளாவில் 200 படையிடங்களும், தமிழ்நாட்டில் 350 பணியிடங்களும், தெலுங்கானாவில் 120 பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. கனரா பேங்கில் அப்ரண்டீஸ் பதவிக்கு விண்ணப்பிக்கும் முறைகள் பின்வருமாறு,
1. அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு பிரிவில் பட்டங்கள் பெற்றிருக்க வேண்டும்
2. வயதுவரம்பு 28க்குள் இருக்க வேண்டும். ஒவ்வொரு பிரிவினருக்கும் வயது வரம்பு தளர்வு படுத்தப்பட்டுள்ளது. Sc/St பிரிவினருக்கு ஐந்து ஆண்டுகளும்,OBC பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும், PWBD வகுப்பினருக்கு 10 ஆண்டுகளும் தளர்வுபடுத்தப்பட்டுள்ளன.
3. 12 வகுப்பு பெற்ற மதிப்பெண் அடிப்படையிலேயே பணியிடங்கள் வழங்கப்பட உள்ளது.
4. https://canarabank.com/ இந்த இணையதள முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் அப்ரண்டீஸ் பதவிக்கானhttps://nats.education.gov.in/ இந்த வலைதள பக்கத்தில் முதலில் பதிவு செய்ய வேண்டும்.
5. இந்த பணியிடங்களுக்கு செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 4 வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
6. Sc/st/PWBD பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. இதர பிரிவினருக்கு 500 செலுத்தி விண்ணப்பிக்கலாம்.