சமூக வலைதளத்தில் அவ்வபோது சில வீடியோக்கள் வைரலாகி வருகின்றனர். அதில் சில வீடியோக்கள் வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்றுள்ளன. இந்நிலையில் தற்போது இணையதளத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், தாய் ஒருவர் தனது பச்சிளம் குழந்தையை ஒரு கையில் பிடித்த படி மொட்டை மாடி சுவற்றின் விளும்பில் அமர வைத்துள்ளார். அந்தக் குழந்தையை அவர் சிறிதும் பயமின்றி ஒரு ஆபத்தான முறையில் அமர வைத்துள்ளார். அதன் பின் மற்றொரு கையில் அவர் செல்போனை பிடித்தபடி வீடியோவை பதிவு செய்கிறார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அவர் அந்த வீடியோவில் “நான் ஒரு தைரியமான பையன், உலகத்தை ஆராய்ந்து, எனது அம்மாவுடன் விட்டமின் டி எடுத்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர் குழந்தை ஆபத்தான முறையில் இருக்கிறது ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பி உள்ளார். மற்றொருவர் அவர் என்ன செய்கிறார் என்பது அவருக்கு தெரியும் என்று கூறியுள்ளார்.