மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் சுற்றுலா தளங்கள் உள்ளது. அவற்றின் டிக்கெட் விற்பனை மூலம் கிடைத்த வருவாய் எவ்வளவு என்று மாநிலங்களவையில் உறுப்பினர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த மத்திய கலாச்சார துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் கடந்த 5 ஆண்டுகளில் டிக்கெட் விற்பனை மூலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் ரூ. 297 கோடி வருவாய் ஈட்டு உள்ளதாக தெரிவித்தார்.

கடந்த 5 ஆண்டுகளாக டிக்கெட் வருவாய் ஈட்டுவதில் தாஜ்மஹால் முதலிடத்தில் உள்ளதாகவும் மத்திய மந்திரி தெரிவித்தார். இதற்கு அடுத்தபடியாக டெல்லியில் உள்ள குதுப்மினார், செங்கோட்டை 2-வது மற்றும் 3-வது இடத்தில் உள்ளனர். கடந்த 2023-24 நிதியாண்டில் டிக்கெட் விற்பனை மூலம் குதுப்மினார் 23.80 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக டெல்லி செங்கோட்டை 18.08 கோடி ரூபாய் வருவாய் ஈடியுள்ளது என்று மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.