
இணையதள வாயிலாக தாங்கள் வங்கி அதிகாரிகள் அல்லது காவல் அதிகாரிகள் எனக்கூறி அப்பாவி மக்களிடையே பணம் பறிக்கும் கும்பல்கள் தற்போது செயல்பட்டு வருகின்றன. இதுகுறித்து மாநகராட்சி காவல் அதிகாரி கூறியதாவது, இவர்கள் அப்பாவி மக்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தாங்கள் FedEx,Bluedart போன்ற கொரியர் கம்பெனியில் இருந்து தொடர்பு கொள்வதாக கூறி சட்ட விரோதமான பார்சல் தங்களுக்கு வந்துள்ளது எனக் கூறி மிரட்டுவார்கள்.
மேலும் கடத்தல் புகார்களில் சிக்காமல் இருப்பதற்காக தங்களுக்கு வங்கி கணக்கிலிருந்து பணத்தை செலுத்துமாறு மோசடி செய்வார்கள். இந்த ஆண்டில் மட்டுமே 190 வழக்குகள் சைபர் கிரைமில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று மும்பையில் வாடிக்கையாளர் சேவை நிலையத்தில் இருந்து பேசுவதாக கூறி அப்பாவி நபரை ஏமாற்றியுள்ளார்கள். அந்த நபருக்கு FedEx இலிருந்து கடத்தல் பொருள் தங்கள் பெயரில் வந்துள்ளதாகவும்
இதனால் இந்தப் பார்சலை மும்பை அந்தேரி காவல் நிலையத்திற்கு மாற்ற போவதாகவும் கூறி மிரட்டி உள்ளனர். மேலும் அவரை சட்ட விரோதமான பொருள்களை கடத்தல் வழக்குகளில் சிக்காமல் இருக்க தங்கள் வங்கி கணக்கில் இருந்து தாங்கள் கூறிய பணத்தை மாற்றம் செய்யுமாறும் கூறியுள்ளனர். இதனை நம்பி ஏமாந்த அந்த நபர் பல்வேறு வங்கி கணக்குகளுக்கு ரூபாய் ஒரு கோடியே 18 லட்சத்தை மாற்றியுள்ளார்.
அவர்கள் தன்னை ஏமாற்றி விட்டார்கள் என அறிந்தவர் காவல்துறையில் சைபர் கிரைம் வழக்கில் வழக்குப்பதிவு செய்துள்ளார்.இதன் மூலம் வங்கி பரிவர்த்தனை கணக்கினை வைத்திருப்பவர் ரமேஷ் பாய் படாபி போக்ரா மற்றும் பரேஷ், விவேக் ஆகியோரை மும்பை மாநகராட்சி காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதுபோன்றே சிபிஐ போல பேசி அப்பாவி நபரை ஏமாற்றியுள்ள சம்பவமும் நடைபெற்றுள்ளது. நடைபாண்டில் மட்டுமே சைபர் க்ரைம் வழக்கில் 136 கோடியே 46 லட்சத்தை பொதுமக்கள் இழந்துள்ளனர். இதுகுறித்து சென்னை மாநகராட்சி காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,
1. எந்த ஒரு காவல்துறையும், வங்கி அதிகாரிகளும், எந்த விசாரணை அமைப்புகளில் இருந்தும் ஸ்கைப்,whatsapp போன்ற செயலிகளில் இருந்து எந்த ஒரு விசாரணையும் மேற்கொள்ளாது.
2. சந்தேகமான முறையில் எந்தவித அழைப்புகள் வந்தாலும் அதனை துண்டித்து விட்டு அருகே உள்ள காவல்துறைக்கு சென்று புகார் அளிக்க வேண்டும்.
3. தெரியாத தொலைபேசி அழைப்புகளிடம் வங்கி சார்ந்த கணக்குகள், otp, பாஸ்வோர்ட் போன்ற எண்களை பகிரக்கூடாது.
4. மக்கள் இதுபோன்று மோசடிகளில் சிக்கி இருந்தால் அருகே உள்ள காவல் நிலையத்தில் சைபர் கிரைம் அமைப்புகளில் தங்களது புகார்களை அளிக்கலாம். மேலும் இலவச எண்ணான 1930 என்ற எண்ணிற்கு அழைத்து தங்களது புகார்களை தெரிவிக்கலாம்.
5. www.cybercrime.gov.in என்ற இணையதள பக்கத்திலும் தங்களது புகார்களை கொடுக்கலாம்.