
திமுக வாக்குச்சாவடி முகவர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் K.N நேரு, இந்த கூட்டத்தை முதலிலே திருச்சியில் நடத்தச் சொல்லி நம்முடைய முதல்வர் அவர்கள் உத்தரவிட்டார்கள். ஏன் திருச்சியில் நடத்த வேண்டும் என்று சொன்னால், திருச்சியிலே எந்த நிகழ்ச்சி தொடங்கினாலும் இறுதியில் அது வெற்றியாக அமையும் என்ற காரணத்தினால் திருச்சியிலே ஆரம்பிக்க சொன்னார்கள். அப்படி ஆரம்பித்து இறுதியாக சென்னைக்கு வந்திருக்கிறது.
1977 ஆம் ஆண்டு கழகம் மிகப் பெரிய சங்கடத்தை சந்தித்த பொழுது சென்னையும், தஞ்சையும் தான் கழகத்தை… கழக தலைவர் கலைஞர் அவர்களை தூக்கி நிறுத்திய மாவட்டங்கள்… சென்னை மாவட்டம் சென்னை சுற்றி இருக்கின்ற மாவட்டங்கள் தான். எனவே கழகம் இப்பொழுது ஆட்சியில் இருக்கின்றது… நம்முடைய முதலமைச்சர் சொன்ன திட்டங்களை எல்லாம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். இருந்தாலும் எப்படியாவது நமக்கு ஒரு மிகப்பெரிய கெட்ட பெயரை உண்டாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு…
மத்தியிலே ஆட்சியில் இருக்கிறவர்கள் தினம் தோறும் ஏதேனும் செய்தியை….. தினம் தோறும் எதாவது ஒரு செய்தியை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். கழகத் தோழர்களுக்கு நன்றாக தெரியும். கழகத்திற்கு ஒரு சிரமம் என்றால், எப்படியெல்லாம் வீறு கொண்டு எழுவார்கள் என்பதை நான் கடந்த 40 ஆண்டு காலமாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். அப்படி இன்றைக்கு நம்மை துவங்கி ஏளனம் பேசுகிறவர்கள்….
நம்மை இகழ்ந்து பேசியவர்கள் எல்லாம் மூக்கிலே விரல் வைக்கின்ற அளவிற்கு மிகப்பெரிய வெற்றியை கழகத்திற்கு…. தளபதி அவர்களுக்கு நாம் உருவாக்க வேண்டும். அதற்கு ஒரு எடுத்துக்காட்டான கூட்டம் தான் சென்னையில் மாவட்டத்தை சுற்றி திருவள்ளூரில் இந்த கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.