
செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் GK வாசன், நீட் தேர்விற்கு ஒன்று சொல்கிறேன்…. நீட் தேர்வை பொருத்தவரையில் நீட் தேர்வு வேண்டாம் என்றால், அகில இந்திய அளவிலே மக்கள் மன்றத்திலே பெரும்பாலான உறுப்பினர்களைப் பெற்று, உங்கள் முடிவை உங்கள் ஆட்சியிலே நீங்கள் எடுக்க வேண்டும்.
அந்த கனவு நினைவாக போவது கிடையாது. அல்லது நீதிமன்றத்திற்கு சென்று நீதிமன்றத்தின் மூலம் முழுமையாக ஒரு ஜட்ஜ்மெண்டை பெற வேண்டும். இரண்டும் இல்லாமல் பள்ளிகளுக்கு சென்று மாணவர்களிடம் கையெழுத்து வாங்கி…. மாணவர்களுடைய மனநிலையை குழப்புவது…. பெற்றோர்களின் எதிர்பார்ப்பை மாற்றக்கூடிய ஒரு நிலை என்பது ஒரு தவறான செயல்.
கல்வியிலே அரசியலை ஒருபோதும் புகுத்த கூடாது. அதனை திமுக தொடர்ந்து செய்து கொண்டிருப்பது தவறான ஒன்று. நீட் தேர்வு வேண்டும், வேண்டாம் என்று சொல்லுகின்ற கட்சிகள் வேற. அதற்கு மக்கள் மன்றமும், நீதிமன்றமும் இருக்கு. அந்த பிரச்சனைக்கு நான் இப்ப போகல. நான் சொல்றது…. தொடர்ந்து நீட் தேர்வு அகில இந்திய அளவில் நடந்து கொண்டிருக்கும்போது….
தமிழக மாணவர்கள் பிற மாநில மாணவர்களுக்கு சவால் விடும் வகையில் செயல்பட்டு, படித்துக் கொண்டிருக்கிறார்கள்… சென்ற அதிமுக ஆட்சியிலே அதற்கு உண்டான ஒரு சதவீதத்தை விசேஷமாக ஏற்படுத்தி, ஏழை – எளிய கிராமப்புற மாணவர்களுக்கு உத்திரவாதம் கொடுத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலிலே…
இன்றைக்கு மாணவர்களை கையெழுத்து இயக்கம் என்று கூறிக்கொண்டு….. மாணவர்கள் பரீட்சை எழுதுபவர்களை குழப்புவது, தேவையற்ற ஒன்று. மாணவர்களும், பெற்றோர்களும் திமுக செய்கின்ற இந்த கல்வியில் அரசியல் புகுத்துகின்ற பணியின் அடிப்படையிலே குழப்பமான மனநிலையில் இருக்கிறார்கள் தெரிவித்தார்.