
அதிமுக அரசுக்கு தான் தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் வாக்கு என்பது அதிகமாக கிடைக்கும் என்று கூறப்படும் நிலையில் அதனை மாற்ற தற்போது திமுக முயற்சி செய்து வருகிறது. தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் அதிகமாக காணப்படும் நிலையில் திமுக அவர்களின் வாக்குகளை பெற தவறி விடுகிறது. அதிமுகவுக்கு முக்குலத்தோர் வாக்குகள் பெரும்பான்மையாக கிடைக்கும். தற்போது எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொது செயலாளராக மாறிவிட்ட நிலையில் அவர் கவுண்டர் சமூகத்திற்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக கூறப்படுகிறது.
இது முக்குலத்தோர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள். இந்நிலையில் திமுக கட்சி தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் வாக்குகளை குறிவைத்து காய்களை நகர்த்தி வருவதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதிமுகவுக்கு தான் முக்குலத்தோர் வாக்குகள் என்ற நிலை மாறி திமுகவுக்கும் வாக்குகள் விழ வேண்டும் என்பதற்காக அடிமட்டத்தில் இறங்கி திமுக களப்பணி ஆட்சி வருகிறதாம். இது எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து தெற்கில் பொதுக்கூட்டங்கள் நடத்தி முக்குலத்தோர் வாக்குகளை பெரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். மேலும் டெல்டா மாவட்டங்களில் ஒரு அமைச்சர் இல்லையே என்ற குறை நிலவிய நிலையில் டிஆர்பி ராஜாவை புதிய அமைச்சராக திமுக அரசின் நியமித்ததும் முக்குலத்தோர் வாக்குகளை குறி வைத்துதான் என்று கூறப்படுகிறது.