அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் நேற்று சாத்தூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, திமுகவில் முதல்வர் ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி தான் எங்கள் அண்ணா. அவருக்குப் பிறகு இன்பநதி தான் எங்கள் அண்ணா என்று துரைமுருகன் பேசுவது ஏற்புடையது அல்ல. மத்திய அரசின் ஒரே நாடு மற்றும் ஒரே தேர்தல் திட்டத்திற்கு அதிமுக ஆதரவு தெரிவிக்கிறது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்கா சென்று திரும்பியபோது தமிழகத்தில் சுமார் 1000 கோடியில் கால்நடை பூங்கா ஒன்றினை உருவாக்கினார்.

ஆனால் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா சென்றபோது சைக்கிள் மட்டும் தான் ஓட்டினார். தற்போது புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் அதிமுகவின் வாக்குகளை பிரிப்பார் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை கிடையாது. அதே சமயத்தில் விஜயை பார்த்து திமுகவினர் பயப்படுகிறார்கள். அதனால்தான் அவருடைய மாநாட்டுக்கு பல்வேறு விதங்களில் பிரச்சனைகளை உண்டு பண்ணுகிறார்கள். எனவே திமுக ஆட்சியை வெளியேற்றுவதற்கான அனைத்து பணிகளையும் விஜய் செய்தால் தான் அவருடைய கட்சிக்கு பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கும். மேலும் தோழமைக் காட்சிகளுக்காக உயிரை கொடுத்து காக்கின்ற ஒரே கட்சி அதிமுக மட்டும் தான் என்று கூறினார்.