
அமைச்சர் மனோ தங்கராஜ் ரபேல் வாட்ச் கட்டி, ஆடு மேய்க்கிற கதையைத்தான் நான் சொன்னேன். தம்பி அண்ணாமலை அவசரப்பட்டு, தான் தான் அந்த வடநாட்டு கைக்கூலி என்று குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பது போல… அவசரப்பட்டு மன்னிப்பு கேட்பதற்கு நாங்கள் ஒன்னும் சாவர்க்கர் பேரன் கிடையாது என தெரிவித்தது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, என்னுடைய ட்விட்டை படிசீங்களா ? அதற்கான பதில் என்னுடைய ட்விட்ல இருக்கு.
அதாவது ஒரு கோழை மட்டும் தான் ட்விட் போட்டுட்டு, டெலிட் பண்ணிட்டு ஓடுவாங்க…. இப்போ திமுக கட்சியே கோழைகள் இருக்கக்கூடிய கட்சி. திமுகவில் இருக்கக்கூடிய தலைவர்கள் எல்லாருமே பாத்தீங்கன்னா…. அடிப்படையில் கோழைகள் அந்த கட்சியில் இருக்கிறாங்க….. பிரதமரை பற்றி மோசமாக ட்விட்டர் போட்டுட்டு, எதிர்ப்பு வந்த உடனே டெலிட் பண்ணிட்டு ஓடினவர் தான் மனோ தங்கராஜ்.
இன்னைக்கு என்னை வடநாட்டு கைக்கூலினு சொல்லிட்டு….. அந்த ட்விட்டர் டெலிட் பண்ணிட்டு…. சொல்லாத மாதிரி ஒரு பொய் சொல்றாரு….. நீங்களே சொல்லுங்க…. இவங்க எல்லாம் பப்ளிக் பதவியிலே… சாதாரண எந்த பதவியிலும் இருப்பதற்கு அடிப்படை தகுதி இவங்களுக்கு இல்லை….. அரசியலில் அடிப்படை குவாலிட்டி இல்லாத பல மனிதர்கள் தான் திமுக அமைச்சர்கள்…. மனோ தங்கராஜ் உதாரணமாக எடுத்துக்கணும் என தெரிவித்தார்.