நடிகர் விஜய்யை கண்டு திமுக பயப்படுகிறது என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கோவில்பட்டியில் பேட்டியளித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர்,  நடிகர்கள் இடையே அரசு பாரபட்சம் பார்க்கக் கூடாது. கடந்த அதிமுக ஆட்சியில் பாரபட்சம் பார்க்கவில்லை. சிறப்பு காட்சிக்கு அனுமதி தந்த பின் குறிப்பிட்ட படங்களுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிப்பது சரியல்ல.  திரைத்துறை தற்போது முடங்கியுள்ளதாக திரைத்துறையினர் கூறுகின்றனர் என குற்றம் சாட்டி உள்ளார்.