
7 மாவட்ட செயலாளர் மீது திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அண்ணா அறிவாயாலத்தில் இன்றைக்கு நடைபெற்ற மாவட்ட செயலாளர் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் வடசென்னையை சேர்ந்த ஒரு முக்கியமான அமைச்சர், தென் தமிழகத்தில் கடைகோடி கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஒரு மாவட்ட செயலாளர், அமைச்சராக இருக்கிறார். வட மாவட்டங்களை சேர்ந்த ஒரு மாவட்ட செயலாளர், அமைச்சராக இருக்கிறார்கள். இது போன்ற முக்கியமான மாவட்டச் செயலாளர்கள் 7 பேர் மீது முதலமைச்சர் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெயர் குறிப்பிட்டே சொல்லியிருக்கிறார். உங்களுடைய செயல்பாடுகள் மிகவும் மோசமாக இருக்கிறது. நீங்கள் இன்னும் சரியாக செயலாற்ற வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் வாக்குச்சாவடி முகவர்கள் நியமனத்திலும் சுணக்கமாக இருக்கிறது. அதேபோல சில கட்சி நிர்வாகிகள் உங்கள் மீது தொடர்ச்சியாக புகார் தெரிவிக்கிறார்கள் எனவும் முதல்வர் ஸ்டாலின் சொல்லி உள்ளார்.