இந்தியாவில் பொதுமக்கள் மிக விமரிசையாக கொண்டாடும் பண்டிகைகளில் முக்கியமானது தீபாவளி. இந்த ஆண்டும் நாடு முழுவதும் சிறப்பாக தீபாவளி வருகிற அக்டோபர் மாதம் 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் தற்போது உலகம் எங்கிலும் தீபாவளியை கொண்டாடுவதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதேபோன்று சமீபத்தில் அமெரிக்கா வெள்ளை மாளிகையில் தீபாவளி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோபைடன் தனது இணைய பக்கத்தில் தெரிவித்ததாவது, அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில்  சிறப்பாக தீபாவளியை கொண்டாடபட்டது. அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் என கூறியுள்ளார். மேலும் அமெரிக்காவில் தெற்கு ஆசிய சமூகம் மிக வேகமாக வளரும் சமூகமாகும். இந்த சமூகம் அமெரிக்காவின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் பெரிதும் உதவி உள்ளது. பல திறமைகளில் உயர்ந்து காணப்படும் அமெரிக்கா எப்படி இவ்வளவு வளர்ச்சி அடைந்தது என்பதை ஒருபோதும் மறவாது என கூறியிருந்தார்.