தீபாவளி வருகிற அக்டோபர் மாதம் 31ஆம் தேதி அனைவராலும் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் தீபாவளி அன்று அனைத்து கடைகளிலும் உணவுப் பொருள்கள் விற்பனை விமர்சையாக நடைபெறும். இதுகுறித்து தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளதாவது, தீபாவளி பண்டிகை ஒட்டி விற்கப்படும் உணவுப் பொருட்கள் அனைத்தும் தரமானதாகவும், காலாவதி தேதி மற்றும் உற்பத்தி தேதிஉணவுப் பொருள்களில்  குறிப்பிடப்பட வேண்டும். உணவுப் பொருள் தயாரிப்பு இடம் ஆகியன இடம்பெற்றிருக்க வேண்டும் எனவும் உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்தது.

மேலும் வெளியிடங்களில் வைத்து உணவு பொருட்கள் தயாரிக்கும் கடை நடத்தினால் உணவு பாதுகாப்புத் துறையிடம் முறையாக அதற்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும். உணவு பாதுகாப்புத்துறை கூறிய அறிவுரையின்படி உணவுப் பொருள்கள் தரமானதாக தயாரிக்கப்பட வேண்டும். மீறினால் சட்டப்படி கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தகுந்த தண்டனையும் வழங்கப்படும். இவ்வாறு உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.