அமெரிக்கா அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் போல பாகிஸ்தானில் தள்ளுவண்டி வியாபாரி ஒருவர் தோற்றம் அளிக்கின்றார். இது தொடர்பான வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில் பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணத்திலுள்ள ஷாகிமால் பகுதியை சேர்ந்த சலீம் என்பவர் தள்ளு வண்டியில் குல்ஃபி வியாபாரம் செய்து வருகின்றார்.

இதில் ட்ரம்பை போல தோற்றமளிக்கும் இவர் சந்தை பகுதியில் பாட்டு பாடி வியாபாரம் செய்வது வழக்கம். அந்த வீடியோக்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது. தற்போது அவரின் புதிய வீடியோக்கள் மீண்டும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. மேலும் அப்பகுதியை சேர்ந்த பலரும் அவருடன் செல்பி புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.