தமிழகத்தின் ஆளுநர் ஆர்.என். ரவி, சமீபத்தில் சென்னை காந்தி மண்டபத்தில் மது பாட்டில்கள் கிடந்ததாக கூறியதாக செய்தி வெளியானது. இந்த குற்றச்சாட்டுக்கு எதிராக, தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார். “ஆளுநர் தனது அதிகார வரம்பை மீறி, அரசியல்வாதியாக நடந்து கொள்கிறார். ராஜ்பவனை அரசியல் பவனாக மாற்றியுள்ளார் ஆளுநர் ஆர்.என். ரவி

“ஒரு ஆளுநரின் முக்கியக் கடமையானது, மாநில அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவது தான். ஆனால், ஆளுநர் ரவி, இந்த உறவை துண்டிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளார். இதனால், ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையில் ஏற்கனவே நிலவும் நெருக்கடிகளை அதிகப்படுத்துவதற்கு அவர் முயற்சி செய்கிறார்” என்று அவர் தெரிவித்தார்.