சமூக ஊடகங்களில் தற்போது வைரலாக பரவி வரும் ஒரு வீடியோவில், மூன்று கோப்ரா பாம்புகள் நடுரோட்டில் ஒன்றாக விளையாடும் அபூர்வமான காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. 1 நிமிடம் 50 விநாடிகள் நீளமுள்ள இந்த வீடியோவில், பாம்புகள் ஒன்றோடு ஒன்று சுழன்று, தலையை ஒரே நேரத்தில் உயர்த்தி ஆடுவது போல் காணப்பட்டன.

 

இது @TNEXPLORER என்ற X தளத்தில் VISWA என்ற பயனர் இந்த வீடியோவை பகிர, அது எண்ணற்ற பார்வைகள் மற்றும் விமர்சனங்களை ஈர்த்து வருகிறது. “பாம்புகளுக்கு காதலுக்கேற்ற சரியான உடல் அமைப்பு உண்டு… இயற்கை மனிதனை ஏமாற்றி விட்டது!” என்ற விதவிதமான கருத்துகளும், பயமும், வியப்பும் கலந்த பதில்களும் தொடர்ந்து வருகின்றன.