
செய்தியாளர்களிடம் பேசிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ, பெண்களுக்கு எதிரான கேஸஸ் பீகாரில் தான் அதிகமாக இருக்கிறது. வட இந்தியாவில் மேக்சிமம் கேஸ் எங்களுக்கு வரும். மேக்ஸிமம் கேஸ் பீகார், ஆந்திர பிரதேஷ் இது இரண்டு தான் மேக்ஸிமம் கேஸ் வரும். நான் வந்து உறுப்பினராக சொல்லுகிறேன்… எங்களுக்கு வருகின்ற கேஸை மட்டும் தான் பேச முடியும்.
பெண்கள் நேஷனல் கமிஷன் உறுப்பினராக அது மட்டும் தான் பேச முடியும். எங்களுக்கு வருகின்ற கேஸ்…. எனக்கு வருகின்ற கேஸ்…. பீகார் எனக்கு கீழே தான் இருக்கிறது. எனக்கு மேக்ஸிமம் வருகின்ற கேஸ் பீகார், ஆந்திர பிரதேஷ். தமிழ்நாடு ரொம்ப பின் வாங்கி இருக்கிறது என்று சொல்ல மாட்டேன், இங்கதான இருக்கிறேன். டெய்லி கேஸ் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
வெளிமாநிலத்தில் அங்கு போய் பார்த்துக்கொண்டு இருக்கின்றோம். நம்ப மாநிலத்தில் இங்கு தான் இருக்கிறோம். டெய்லி பார்க்கிறோம். டெய்லி நியூஸ் வருகிறது. உங்களுக்கும் வருகிறது…. அதுதான் கேட்கிறேன்….. முதலமைச்சர் ஏதாவது ஒரு வார்த்தை சொல்லுகிறாரா?பெண்களுக்கு எதிராக வரும் கொடுமைகளுக்கு பெண்கள் புகார் கொடுக்க வேண்டும் என்று இன்னும் விழிப்புணர்வு வரவில்லை.
இன்னும் கொஞ்சம் பெண்கள் பயத்தில் தான் இருக்கிறார்கள். இப்ப நீங்கள் பார்த்தீர்கள் என்றால், விழுப்புரத்தில் இரண்டு குழந்தைகளுக்கு ஆசிரியரிடம் இருந்து பாலில் தொல்லை இருக்கும்போது அவருக்கும் மிரட்டல் போகிறது…. போலீஸ்காரர் மிரட்டுகிறார்கள், கட்சி காரர்கள் போய் மிரட்டுகிறார்கள், அப்படி இருக்கும் பொழுது ஒரு பயத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சமுதாயத்தில் ரொம்ப கஷ்டப்பட்டு வாழ்கின்ற மக்கள்…. அப்படி இருக்கும்பொழுது குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும்.
கல்விதான் முக்கியம் என்று படிக்க வைக்கும் போது…. பெண் குழந்தைகளுக்கு இந்த மாதிரி ஒரு அநியாயம் நடக்கும்போது, நிச்சயமாக அவர்கள் முன்வந்து பேசுவதற்கு கொஞ்சம் பயப்படுகிறார்கள். நாளைக்கு வேறு ஏதாவது பிரச்சினை வருமா ? என்று பயப்படுகிறார்கள். எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. இந்த இரண்டு குழந்தைகள் வீட்டில் இருந்து கான்டெக்ட் பண்ணி,
உங்களால் ஏதாவது பண்ண முடியுமா ? என்று என்னிடம் கேட்டிருக்கிறார்கள். எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. கேஸ்ஸில் நீங்கள் ஒரு விஷயம் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு தடவை போலீஸ் ஒரு கேஸ் எடுத்து விட்டது என்றால், எஃப் ஐ ஆர் ஃபைல் ஆகிவிட்டது என்றால், கமிஷனர் உள்ளே நுழைய முடியாது. இது தான் ரூல்ஸ். அந்த ரூல்ஸை பால்லோவ் பண்ணனும் என தெரிவித்தார்.