
புதிய தமிழகம் கட்சி சார்பில் நடந்த 27ஆம் ஆண்டு தொடக்க முப்பெரும் விழாவில் பேசிய அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமியின் மகனும், புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவருமான ஷ்யாம் கிருஷ்ணசாமி, நம்ம ஜாதியை புகழ்ந்து பேசலாம்…. யார் வேணாலும், புகழ்ந்து பேசலாம். புகழ்ந்துட்டா நமக்கு அப்படியே பெரிய சந்தோஷம் வந்துரும்… அவன ஜெயிக்க வச்சுட்டு தான் அடுத்த வேலையை பார்க்க போவோம்… அவன் புகழுவான்…
நமக்கு ஒரு பிரச்சனைன்னு வந்தா பேச வருவானா ? பேச வரல… புகழ்ந்துட்டா மட்டும் போதுமா? நானும் யார வேணாலும் புகழ்ந்துட்டு போவேன்… ஆனால் அவன் எனக்கு ஓட்டு போடுவானா ? நான் புகழ்ந்துட்டேன் என்பதற்காக…. ஓட்டு போட மாட்டான்… ஆனால் நமக்கே நல்ல தாழ்வு மனப்பான்மை … அவன் புகழ்றான்னு…. பிரச்சனையின் போது அவன் வரலல்ல…
எந்த பிரச்சனைக்கு வந்தான்… இந்து ஒற்றுமை பேசுபவர்கள் வந்தார்களா ? இந்துக்கள் ஒற்றுமை வேணும்னு போராடியவர்கள் நாங்க… அதற்காக நாங்கள் பாதிக்கப்படும்போது….. நாங்கள் கொலை செய்யப்படும் போது…. இதை சமரசம் பண்ணிட்டு, நாங்க இந்து ஒற்றுமைக்கு எப்படி போராட முடியும் ? யாருக்கு இந்து ஒற்றுமைகள் வேண்டுமோ, அவங்க வந்து இந்த கூலிப்படைகளையும் கலவரக்காரங்களையும் அடக்கி வைக்கணும்.
உங்களுக்கு தேவையான இந்து ஒற்றுமை, பாதிக்கப்படுற எங்ககிட்ட வந்து எப்படி சமரசம் பண்ணுவீங்க ? அதை எல்லாம் விட்டு நாங்கள் எந்த காலத்திலும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்... ஒரு காலத்திலும் இந்த சமுதாயத்திற்காக… இந்த சமுதாயத்தை விட்டுக் கொடுத்து சமரசம் செய்து கொள்ள விட மாட்டார் டாக்டர் ஐயா…. அப்படித்தான் எங்களை இந்த புதிய தமிழகம் கட்சியில் வளர்த்திருக்கிறார் என தெரிவித்தார்.