
நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் சமீபத்தில் வெளியான நயன்தாரா ஆவணப்படம் குறித்த சர்ச்சை பெரும் அளவு பேசப்பட்டது. அதாவது நடிகர் தனுஷ் நானும் ரவுடிதான் படத்து மூன்று நிமிட காட்சிகளை ஆவணப்படத்தில் பயன்படுத்துவதற்காக நடிகை நயன்தாராவிடம் காப்பிரைட்ஸ்காக ரூபாய் பத்து கோடி கேட்டதாக நடிகை நயன்தாரா தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர் தகவல் ஒன்றை பகிர்ந்து இருந்தார். இதற்கு பலரும் நடிகை நயன்தாராவுக்கு ஆதரவாக பேசியிருந்தனர். அதில் முதலாவதாக நடிகை பார்வதி தனது ஆதரவை தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, நடிகை நயன்தாராவின் பதிவை பார்த்தவுடனேயே அதற்கு ஆதரவளிக்க வேண்டும் என தோன்றியது.
ஆதரவளிக்க யாருமில்லாத போது எப்படி இருக்கும் என்பதை நானும் உணர்ந்திருக்கிறேன். தனிநபராக இந்த இடத்திற்கு வந்திருக்கும் நடிகை நயன்தாரா அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்ட அனுபவங்களை படித்தபோது எனக்கும் அவருக்கு ஆதரவாக பேச வேண்டும் என தோன்றியது. திரை உலகின் உச்சத்தில் இருக்கும் லேடி சூப்பர் ஸ்டார் இப்படி ஒரு கடிதத்தை காரணம் இல்லாமல் எழுதி இருக்க மாட்டார். நம்மைப் போன்றே ஒருவர் பலர் இன்னல்களை, இடையூறுகளை கடந்து வந்தது வந்தது போல் தோன்றியது. எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நயன்தாராவுக்கு ஆதரவாக நிற்பேன் எனக் கூறியுள்ளார்.